சென்னையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி, கல்வீச்சு... நள்ளிரவில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

சென்னையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி, கல்வீச்சு... நள்ளிரவில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
  • News18
  • Last Updated: February 15, 2020, 7:43 AM IST
  • Share this:
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதனைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு போராட்டம் நடைபெற்றது.


குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று பகல் 2 மணிக்கு போராட்டம் தொடங்கியது. அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அதில் ஒரு சிலரை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் ஏராளமானோர் கூடினர். ஐந்து மணி நேரத்தை தாண்டி இரவிலும் போராட்டம் தொடர்ந்த நிலையில், அதனை முடித்துக் கொள்ளுமாறு காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் கலைந்து செல்ல மறுத்த நிலையில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்து கற்களும் வீசப்பட்டன.


தடியடி மற்றும் தள்ளுமுள்ளுவில் போராட்டக்காரர்கள் 5 பேரும், மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாரி உள்பட காவலர்கள் நான்கு பேரும் காயமடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை கைது செய்த காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். ஆனாலும் பெண்கள் நள்ளிரவிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கைதானவர்களை விடுவிப்பதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் அறிவித்தார்.

காவல் ஆணையரின் வேண்டுகோளை ஏற்க மறுத்து வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தை பலரும் தொடர்ந்தனர்.இதனிடையே வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியைக் கண்டித்து சென்னையின் புறநகர் மட்டுமின்றி, மதுரை, கோவை, ஈரோடு,உதகமண்டலம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு போராட்டம் நடைபெற்றது.

Also see:

 
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்