ஐந்து மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கோயம்பேடு காய்கறி அங்காடி

Youtube Video

சமூக இடைவெளி, முககவசம் அணிவது போன்ற விதிகளுடன் கோயம்பேடு மொத்த வியாபார அங்காடி இன்று திறக்கப்பட்டது.

  • Share this:
கோயம்பேடு காய்கறி, பழம், பூ மற்றும் தானிய அங்காடி மூலமாக 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவியது. அதனால் கடந்த மே 5 ஆம் தேதி ஆசியாவில் மிகப்பெரிய  அங்காடியான கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. மேலும் தற்காலிகமாக சந்தை திருமழிசை பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 18 ஆம் தேதி மொத்த விற்பனை தானிய அங்காடி திறக்கப்பட்டது. மேலும் பல்வேறு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது தனிமனித இடைவெளியை பின்பற்றுவது என பல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்கள் இரவு 8 மணி முதல் விடியற்காலை வரை சந்தைகளில் சரக்குகளை இறக்க அனுமதியும் விடியற்காலை முதல் காலை 9 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்


மேலும் 25 கிலோ விற்கு மேல் வாங்கும் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி, சில்லரை வியாபாரம் இன்னும் தொடங்கப்படவில்லை., அதனால் பொதுமக்களுக்கு சந்தையில் அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vaijayanthi S
First published: