முழு ஊரடங்கு - கொத்தவால் சாவடி சந்தை நாளை முதல் மூடல்

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டு உள்ள 12 நாள் ஊரடங்கின் போது கொத்தவால்சாவடி மார்க்கெட் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு - கொத்தவால் சாவடி சந்தை நாளை முதல் மூடல்
கோப்புப் படம்
  • Share this:
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30 வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமலாக உள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் விற்கும் கடைகள் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். எனவே மக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று அரசு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சென்னையில் உள்ள சவுகார்பேட்டை - கொத்தவால் சாவடி மளிகை பொருட்கள் விற்கும் சந்தையில் நேற்றிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.



ஏற்கனவே, குறுகலான தெருக்களை கொண்ட கொத்தவால்சாவடியில் அதிகமான மக்கள் குவிந்து மொத்தமாக பொருட்களை வாங்குவதன் காரணமாக நோய் பரவல் அதிகரிக்கும் என வியாபாரிகள் அச்சம் தெரிவித்தனர்.

மேலும் படிக்க...ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வு

அதனை தொடர்ந்து முழு ஊரடங்கு அமலில் உள்ள 12 நாட்களுக்கு கொத்தவால் சாவடி சந்தை மூடப் படுவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading