முகப்பு /செய்தி /தமிழ்நாடு / புதிய பன்னோக்கு மருத்துவமனை திறப்பு - தலைமை செயலகமாகிறதா ஓமந்தூரார் மருத்துவமனை?

புதிய பன்னோக்கு மருத்துவமனை திறப்பு - தலைமை செயலகமாகிறதா ஓமந்தூரார் மருத்துவமனை?

ஓமந்தூரார் மருத்துவமனை

ஓமந்தூரார் மருத்துவமனை

சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கிங்ஸ் பன்னோக்கு மருத்துவமனை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஜூன் 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளன்று, கிண்டி கிங்ஸ் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230 கோடி ரூபாய் செலவில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, கிண்டி கிங்ஸ் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் காலியாக இருந்த 4 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை தேர்வு செய்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சுமார் 5 லட்சத்து 53 ஆயிரம் சதுர அடியில் மூன்று பிளாக்குகளாக கிண்டி கிங்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு பிளாக்குகளிலும் தலா ஐந்து தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வண்ணம் பூசும் பணிகளும் மருத்துவ உபகரணங்கள் பொருத்தி, வார்டுகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அனைத்து தளங்களிலும் நோயாளிகளுக்கு வசதியாக சாய்தள வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஜூன் மாதத்தில் மருத்துவமனையை திறக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மொத்தம் 18 துறைகளுடன் இயங்கும் இந்த மருத்துவமனை மூலம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயர் சிறப்பு சிகிச்சை வசதிகளை பொதுமக்கள் பெற முடியும்.

இதனிடையே, புதிய பன்னோக்கு மருத்துவமனை திறப்பால், ஓமந்தூரார் மருத்துவமனை மீண்டும் தலைமை செயலகமாக மாற்றப்படுமா என்ற கேள்வி நிலவி வந்தது.

ஆனால், அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை தொடர்ந்து மருத்துவமனையாக இயங்கும் எனவும் தற்போது உடனடியாக அதை மாற்றுவதற்கு அரசுக்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Hospital, Ma subramanian