• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கருப்பர் கூட்டம் வீடியோ விவகாரம்: பாஜக கரு.நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 250 பேர் கைது..

கருப்பர் கூட்டம் வீடியோ விவகாரம்: பாஜக கரு.நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 250 பேர் கைது..

கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து எழும்பூர் நீதிமன்றம் முன் கூடியவர்களை சட்டவிரோதமாக கூடுதல், தொற்று நோய் பரவல் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • Share this:
தமிழ் கடவுளான முருகன் மற்றும் கந்த சஷ்டி கவசத்தை கொச்சையாக சித்தரித்து கருப்பர் கூட்டம் என்கிற யூடியூப் சேனலில் காணொளி வெளியிடப்பட்டதாக இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பாஜக சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு வீடியோ வெளியிட்டோர் கைது செய்யப்பட வேண்டும் கருப்பர் கூட்டம் யூடியூப் தடைசெய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

இந்த வழக்கில் மத்திய குற்றப் பிரிவினர் வேளச்சேரியை சேர்ந்த செந்தில் வாசன் என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுரேந்தர் நடராஜன் என்னும் நாத்திகன் என்பவர் நேற்று முன்தினம் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார் .

அவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னை அழைத்து வந்தனர். நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்கிற தகவலறிந்து பாஜகவின் கரு. நாகராஜன் தலைமையில் சுமார் 250 பேர் எழும்பூர் நீதிமன்ற வாசலில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மேலும் படிக்க...

வீடு காலி செய்வதில் பிரச்னை.. குடும்பமே தற்கொலை.. 2 பேர் கைது.. நடந்தது என்ன?

ஆனால் சுரேந்தர் நடராஜன் ராயபுரத்தில் உள்ள நீதிபதி ரோஸ்லின் துரை வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். எழும்பூர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரு.நாகராஜன் உள்ளிட்ட 250 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், தொற்று நோய் பரவல் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: