“எப்போ செய்யப்போறீங்க... எதுக்காக காத்துக்கிட்டு இருக்கீங்க...” முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி

பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் பயந்துபோய் புகாரளித்துவிடக்கூடாது என்பதற்காக பெயர்கள் இப்படி அப்பட்டமாக வெளியிடப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

“எப்போ செய்யப்போறீங்க... எதுக்காக காத்துக்கிட்டு இருக்கீங்க...” முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி
கமல்ஹாசன்
  • News18
  • Last Updated: March 14, 2019, 10:35 PM IST
  • Share this:
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி ஆகியவற்றை போலீசார் மிக அலட்சியமாக வெளியிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை தெரியாமல் போலீசார் செயல்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேட்டியளித்த மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன், தவறுதலாக பெண்ணின் பெயர் வெளியாகிவிட்டதாக கூலாக பதில் கூறினார்.


இதனை அடுத்து, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய அரசாணையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படிக்கும் கல்லூரி, முகவரி என்று முழு விபரமும் அப்பட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் பயந்துபோய் புகாரளித்துவிடக்கூடாது என்பதற்காக பெயர்கள் இப்படி அப்பட்டமாக வெளியிடப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான எனது கேள்விகள்? என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

First published: March 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading