அரசுக்கு எதிரான புத்தகங்கள் விற்றதாக புத்தகக்காட்சியில் வாக்குவாதம் - பத்திரிகையாளர் கைது

அரசுக்கு எதிரான புத்தகங்கள் விற்றதாக புத்தகக்காட்சியில் வாக்குவாதம் - பத்திரிகையாளர் கைது
  • Share this:
சென்னை புத்தக கண்காட்சியில் அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்ற பத்திரிகையாளரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் அன்பழகன். உள்ளாட்சி அலசல் என்ற பெயரில் பத்திரிகை நடத்தி வருகிறார். இவர் சென்னை நந்தனத்தில் நடந்து வரும் புத்தகக் காட்சியில், தான் எழுதிய புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளார்.

இங்கு அரசாங்கத்திற்கு எதிரான சர்ச்சைகுரிய புத்தகங்களை விற்பனை செய்துள்ளார்.


இதையடுத்து தென்னிந்திய புத்தக விற்பனையாளரும், பதிப்பக புத்தக செயலாளருமான முருகன் இதனை பார்த்து அன்பழகனிடம் விசாரித்ததாக தெரிகிறது. இது போன்ற புத்தகங்களை விற்க அனுமதி இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதில் அன்பழகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக முருகன் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அன்பழகன் மீது 341- அத்துமீறி நடந்து கொள்ளுதல், 294(பி)- ஆபாசமாக திட்டுதல், 506(2)- கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இன்று காலை பூந்தமல்லி வீட்டில் இருந்த அன்பழகனை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
First published: January 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading