சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு அதிகளவில் விருந்தினர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் கடந்த 15 நாட்களில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதியில் பணியாற்றும் ஊழியர்கள், ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர்கள் உள்ளிட்டோருக்கு தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது
டிசம்பர் 15ஆம் தேதி நட்சத்திர விடுதியில் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊழியர்கள், விடுதியில் தங்கியிருந்த விருந்தினர்கள் என 600க்கும் மேற்பட்டோருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 85 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
ஐடிசி நட்சத்திர விடுதியில் கொரானா உறுதிப்படுத்தப்பட்ட ஊழியர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம் அமைத்து அப்பகுதிகளைச் சேர்ந்தவர்களின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு வருவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஐ.டிசி நட்சத்திர விடுதி புதிய ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ள நிலையில் அங்கு அடுத்த 10 நாட்களுக்கு எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐஐடியை தொடர்ந்து புதிய ஹாட்ஸ்பாட்டாக ஐ.டி.சி நட்சத்திர விடுதி மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நட்சத்திர விடுதிகளையும் தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.