சென்னையில் எம்எல்ஏ-க்கள் விடுதியில் ஐடி ரெய்டு!

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரின் அறைகளில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நள்ளிரவில் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் எம்எல்ஏ-க்கள் விடுதியில் ஐடி ரெய்டு!
ஆபி.உதயகுமார்
  • News18
  • Last Updated: April 15, 2019, 7:49 AM IST
  • Share this:
சென்னை எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதியில் உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறையில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நள்ளிரவில் சோதனை நடத்தினர்.

சேப்பாக்கம், ஓமந்தூரார் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று இரவு 10.30 மணியளவில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர்.

அங்குள்ள சி பிளாக் 10-வது மாடியில் உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரின் அறைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததாக புகார் கூறப்பட்டதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.


அங்கு சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனை நள்ளிரவு 12.30 மணியளவில் நிறைவு பெற்றது. சோதனையில் பணமோ அல்லது ஆவணங்களோ பறிமுதல் செய்யப்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

Also see... பணமதிப்பிழப்பு குறித்து மோடி பேசுவாரா? - ப.சிதம்பரம் கேள்வி  

பிரசார பயணத்தில் விஜயகாந்த்...!Also see... இனி பிரசார களத்தில் விஜயகாந்தை பார்க்கலாம்!


Also See...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading