அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு வருமானவரித்துறை சம்மன்!

அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று அதிகாரிகள் முன்பு ஆஜராகபோகிறாரா? அல்லது வேறு நாளில் ஆஜராக போவதாக நேரம் வாங்கப்போகிறாரா? என்பது இன்னும் தெளிவாகவில்லை.

Web Desk | news18
Updated: April 16, 2019, 8:23 AM IST
அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு வருமானவரித்துறை சம்மன்!
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Web Desk | news18
Updated: April 16, 2019, 8:23 AM IST
சென்னையில் உள்ள எம்.எல்.ஏ., அறையில் நடந்த சோதனை குறித்து வாக்குமூலம் பதிவு செய்யும் நோக்கில், அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக பணம் பதுக்கப்பட்டிருப்பதாக, போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில், வருமானவரித்துறை அதிகாரிகள் சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் தங்கும் விடுதியில் ஞாயிற்றுகிழமை இரவு 10 மணிக்கு சோதனையை தொடங்கினர்.

விடுதியின் சி பிளாக்கில், 10-வது மாடியில் உள்ள வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறை உள்ளிட்ட 4 அறைகளில் சோதனை செய்தனர். சுமார் 4 மணி நேரம் நடந்த சோதனையின்போது ரொக்கம் சிக்கவில்லை. ஆனால், சந்தேகப்படும்படியான காலி பைகள் கிடைத்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், தேர்தல் தொடர்பான விவரங்கள் அடங்கிய துண்டு சீட்டுகள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. வருமானவரித்துறை அதிகாரிகள் எம்.எல்.ஏ., விடுதிக்குள் செல்வதற்குள் பணம் அல்லது பரிசுப்பொருட்கள் அங்கிருந்து அகற்றப்பட்டிலிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.

சோதனை செய்ய அதிகாரிகள் செல்வதற்கு முன்பு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறையில் இருந்ததை பாதுகாவலர் உறுதி செய்துள்ளார். எனவே, இந்த சம்பவத்தில் எழும் சந்தேகம் குறித்து அமைச்சரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய திட்டமிட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், ஆர். பி உதயகுமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஆபி.உதயகுமார்


இன்று இரவு நேரில் ஆஜராகமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதால், அதிகாரிகள் முன்பு ஆஜராகபோகிறாரா? அல்லது வேறு நாளில் ஆஜராக போவதாக அமைச்சர் நேரம் வாங்கப்போகிறாரா? என்பது இன்னும் தெளிவாகவில்லை.

Also see... நீங்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்போகிறீர்கள் - மு.க.ஸ்டாலின்  

வேலுர் மாவட்டத் தேர்தல் ரத்து? குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அனுப்பியதாக தகவல்

Also see... பிரசார பாதையில் எல்.கே. சுதிஷுடன் ஒரு நாள்!


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...