தண்ணீர் பஞ்சம்: வீட்டிலிருந்தே பணிகளை செய்ய ஐடி நிறுவனங்கள் அறிவுறுத்தல்!

அலுவலகத்திற்கு வரும் பணியாளர்களை அவர்களுக்கு தேவையான தண்ணீரை வீட்டில் இருந்து கொண்டு வரும்படி ஐடி நிறுவங்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Web Desk | news18
Updated: June 14, 2019, 3:27 PM IST
தண்ணீர் பஞ்சம்: வீட்டிலிருந்தே பணிகளை செய்ய ஐடி நிறுவனங்கள் அறிவுறுத்தல்!
அலுவலகத்திற்கு வரும் பணியாளர்களை அவர்களுக்கு தேவையான தண்ணீரை வீட்டில் இருந்து கொண்டு வரும்படி ஐடி நிறுவங்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Web Desk | news18
Updated: June 14, 2019, 3:27 PM IST
சென்னையில், தண்ணீர் பஞ்சம் காரணமாக வீட்டிலிருந்தே பணிகளை செய்யும்படி ஊழியர்களை சில ஐடி நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட முக்கிய ஏரிகள் நீர் இன்றி வறண்டு வருகின்றன. இதனால் போதிய தண்ணீர் இல்லாமலும் பருவமழை பொய்த்ததாலும் தண்ணீர் இன்றி சென்னை மக்கள் தவித்து வருகின்றனர். அதிலும் சென்னையில் கடந்த இரு மாதங்களாகவே தண்ணீர் பஞ்சம் அதிகமாக காணப்படுகிறது.

ஓ.எம்.ஆர் பகுதியில், 600-க்கும் அதிகமான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இங்கு ஒரு நாளைக்கு சுமார் 3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் பெரும்பாலான தண்ணீர் பணம் கொடுத்து வெளியிலிருந்துதான் கொண்டு வரப்படுகிறது.

இவற்றில் 60 சதவிகித தண்ணீர் ஐடி நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் தற்போது ஐடி நிறுவனங்களுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது. இதற்கு அங்குள்ள 17 கிணறுகளிலிருந்து தண்ணீர் தரப்பட்டுவந்தது. ஆனால் தற்போது அங்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே தினமும் தரப்படுகிறது. இதனால் அங்கு தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.

மேலும் எவ்வளவு காசு கொடுத்தாலும் தண்ணீர் வாங்குவது  நிறுவனங்களுக்கே சவாலாக மாறி உள்ளது. இந்நிலையில், தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாமல் பல நிறுவனங்கள் திணறி வருகின்றன.

அதனால் தங்கள் ஊழியர்களை ஒரு சில நிறுவனங்கள், வீட்டிலிருந்தே பணிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளன. மேலும், அலுவலகத்திற்கு வரும் பணியாளர்களை அவர்களுக்கு தேவையான தண்ணீரை வீட்டில் இருந்து கொண்டு வரும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

Also see... SUPER EXCLUSIVE : சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தண்ணீர் திருட்டு
Loading...

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...