ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி தொடக்கம்: 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பு

சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி தொடக்கம்: 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பு

சென்னை சர்வதேச புத்தக திருவிழா

சென்னை சர்வதேச புத்தக திருவிழா

மலேசியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் , கத்தார், அமெரிக்கா என 30-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக கண்காட்சியில், இந்த ஆண்டு புதிய முயற்சியாக சர்வதேச புத்தக கண்காட்சி இணைக்கப்பட்டுள்ளது. "தமிழை உலகமெங்கும் கொண்டு செல்வோம் உலகத்தை இங்கு வரவேற்போம்" என்ற அடிப்படையில் சர்வதேச புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார்.

மலேசியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் , கத்தார், அமெரிக்கா என 30-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். பன்னாட்டு அறிஞர்களின் கருத்தரங்களும் இங்கு நடைபெற உள்ளன. இந்த புத்தக கண்காட்சியின் நுழைவு அரங்கில் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் உள்ளது. இதனை பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு வருகின்றனர்.

First published:

Tags: Book Fair