• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை மழையால் சர்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதம்!

சென்னை மழையால் சர்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கும் விமானங்கள் குறித்த நேரத்தில் வந்தன. எனினும் மழை காரணமாக விமானங்களில் பயணிகளின் உடமைகள், உணவு ஆகியவை ஏற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் 59 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

  • Share this:
    சென்னையில் தொடா்ந்து பெய்துவரும் பலத்த மழையால் சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 13 சா்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

    சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகள்,மற்றும் உள்நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

    சென்னையிலிருந்து அபுதாபி, சாா்ஜா, துபாய், கத்தாா், ஓமன்,
    குவைத், இலங்கை, லண்டன், டாக்கா ஆகிய இடங்களுக்கு செல்லும் 13 சா்வதேச விமானங்கள் 30 நிமிடங்களில் இருந்தது ஒரு மணி நேரம் வரையிலும், அதைப்போல் உள்நாட்டு விமானங்களான கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூா்,
    கொச்சி, கோழிக்கோடு, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, அந்தமான்,  கோவா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 46 உள்நாட்டு விமானங்கள் 15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரை தாமதமாகவும் புறப்பட்டு சென்றன.

    தொடா் மழை காரணமாக சென்னையில் இன்று அதிகாலையிலிருந்து,பிற்பகல் 3 மணி வரை 15 மணி நேரத்தில் 59 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. தொடா்ந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் வெளிநாடுகள்,வெளியூா்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் அனைத்தும் தாமதமின்றி குறித்த நேரத்தில் வந்து தரையிறங்குகின்றன.

    இதையும் படிங்க: தீபாவளிக்கு சென்றவர்கள் மூன்று நாள் கழித்து சென்னைக்கு வாங்க... முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை


    சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் மட்டும் தாமதமாவதற்கு காரணம், விமானங்களில் பயணிகளின் உடமைகள் ஏற்றுவதில் காலதாமதம்,பலத்த மழையால் பயணிகளின் விமானங்களில் உணவு பொருட்கள் ஏற்றுவதில் தாமதம் போன்ற காரணங்களால் புறப்பாடு விமானங்கள் மட்டும் தாமதமாவதாக விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் சென்னை மாநகா், வட சென்னை பகுதிகளோடு ஒப்பிடுகையில் மீனம்பாக்கம் பகுதிகளில் மழையின் அளவு குறைவு.எனவே சென்னை விமானநிலைய ஓடுபாதைகளில் மழைநீா் தேங்கி நிற்கவில்லை. இதனால் விமான சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் படிக்க:  சென்னை மழையும் செம்பரம்பாக்கம் ஏரியும்: ஒரு பார்வை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: