குறைவாக சுவாசிக்கும் குறைபாடு உடையவர்களுக்கு கொரோனோ எளிதில் தொற்றக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சென்னை ஐஐடி ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை ஐ.ஐடியின் அப்ளைட் மெக்கானிக்ஸ் துறை பேராசிரியர் மகேஷ் பஞ்சனுலா தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. அதன்படி குறைவாக சுவாசிக்கும் திறன் உடையவர்களின் நுரையீரலில் எளிதாக கொரோனோ வைரஸ் கிருமி சேருவதையும் அதன் காரணமாக நோய் தாக்குதலுக்கு அவர்கள் ஆளாவதையும் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வினை இயற்பியல் தொழில்நுட்ப அடிப்படையில் நீர்ம துளிகளை பயன்படுத்தி மேற்கொண்டுள்ளனர். அதன்படி வண்ணத்தால் தயாரான நீர்ம துளிகளை நுரையீரலில் உள்ள காற்று பைகளின் அளவு கொண்ட 0.3முதல் 2மில்லி மீட்டர் கொண்ட குழாய்களில் செலுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி குழாய்களில் செலுத்தப்பட்ட நீர்ம துளிகள் அதிக அளவில் குழாய்களில் தங்குவதை ஆய்வில் உறுதி செய்திருக்கின்றனர். இதன்படி குறைந்த சுவாசிக்கும் திறன் கொண்டவர்கள் எளிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாவதை உறுதி செய்திருப்பதாக ஐஐடி தெரிவித்துள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.