ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ. வரை பயணம்.. சென்னையில் ஐஐடி மாணவர்கள் தயாரித்த மின்சார பைக்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ. வரை பயணம்.. சென்னையில் ஐஐடி மாணவர்கள் தயாரித்த மின்சார பைக்..

சென்னையில் ஐஐடி தொழில்சார் மையம் சார்பில் மின்சாரத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

 • Share this:
  சென்னை ஐஐடி மாணவர்களின் ஆராய்ச்சித்திறனை மேம்படுத்தவும், அதனை வெளிக் கொண்டுவரவும் ஐஐடி தொழில்சார் மையம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை மாணவர்கள் தொடங்கியுள்ளனர். இதன்படி, விகாஸ் சசிகுமார் என்ற மாணவர் தொடங்கியுள்ள பை-பீம் என்ற நிறுவனம், பைமோ என்ற பெயரில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத்தை தயாரித்துள்ளது.

  செல்போனை சார்ஜ் செய்யும் வேகத்திலேயே இதற்கு சார்ஜ் செய்ய முடியும் என்று குறிப்பிடும் விகாஸ், குண்டும், குழியுமான சாலைகளில் செல்லும்போது கூட உடலுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவிக்கிறார். 2 மணிநேரம் சார்ஜ் செய்வதன் மூலம், 50 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்றும், மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

  மேலும் படிக்க...திருவள்ளூர்: தற்காப்புக்காக கொலை செய்ததாக பெண் விடுவிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்... ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி புகார்

  இந்த வாகனத்தை பதிவுசெய்யவோ, இயக்குவதற்கு ஓட்டுநர் உரிமமோ தேவையில்லை. கடந்த 10-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை 100 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10000 வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பதாக விகாஸ் சசிகுமார் கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: