மாணவி தற்கொலை விவகாரம் - பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை

மாணவி தற்கொலை விவகாரம் - பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை
  • News18
  • Last Updated: November 16, 2019, 11:35 AM IST
  • Share this:
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற போலீசார் தடை விதித்துள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீம் சென்னை ஐஐடியில் முதுகலை முதலாம் ஆண்டு HUMANITIES மானுடவியல் படித்து வந்தார்.

கடந்த 9-ம் தேதி ஐஐடி வளாகத்தில் உள்ள சரயு விடுதியில் தூக்கில் தொங்கியபடி இவர் சடலமாக மீட்கப்பட்டார்.


மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது செல்போன் குறுஞ்செய்தியில் மத ரீதியாக பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மாணவி குறிப்பிட்டிருந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடமும் அவரது பெற்றோர் புகார் தெரிவித்ததை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட சில பேராசியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.பாத்திமாவின் தந்தை நேற்று முதல்வர், டிஜிபி ஆகியோரை சந்தித்து மனு அளித்தார். இன்று, அவரிடமும் சிசிபி குழுவினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐ.ஐ.டி வளாகத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று சிசிபி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

 
First published: November 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading