பேக்கிங் உணவு பொருட்களில் பாக்டீரியாக்கள் உருவாக்கத்தைத் தடுக்க சென்னை ஐஐடி உருவாக்கிய பாக்டீரியா எதிர்ப்பு உணவுத்தாள்..

பேக்கிங் உணவு பொருட்களில் பாக்டீரியாக்கள் உருவாக்கத்தைத் தடுக்க சென்னை ஐஐடி உருவாக்கிய பாக்டீரியா எதிர்ப்பு உணவுத்தாள்..

சென்னை ஐஐடி

ஐ.ஐ.டி பேராசிரியர் முகேஷ் டோபிள் கூறுகையில், தங்களின் கண்டுபிடிப்பு திடக்கழிவு மற்றும் உணவு மாசுபாடு ஆகிய இரண்டு முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

  • Share this:
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் பாக்டீரியாக்கள் உருவாவதைத் தடுக்கவும், விரைவாக உணவுப் பொருள்கள் கெட்டுப்போவதைத் தடுக்கும் வகையிலும், பாக்டீரியா எதிர்ப்பு உணவுத்தாளினை  சென்னை ஐஐடி  தயாரித்துள்ளது பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களில் பாக்டீரியாக்கள் உருவாவதை தடுக்கவும் உணவு பொருட்களை கட்ட பயன்படும்   தாள்களை குப்பையில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதும் நீண்ட நாள் பிரச்னையாக இருந்து வருகிறது.

இந்த நீண்ட காலப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை ஐஐடி   புதிதாக பாக்டீரியா எதிர்ப்பு தாள் ஒன்றினை  உருவாக்கியுள்ளனர். இந்த தாள்கள்  முற்றிலும் பாதுகாப்பானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கழிவு மேலாண்மை நிபுணர்களின் கூற்றுப்படி, அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளிலும் ஒன்பது சதவிகிதம் பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது, சுமார் 12 சதவிகிதம் எரிக்கப்படுகிறது.மேலும், அசுத்தமான உணவை சாப்பிடுவதால், ஒவ்வொரு ஆண்டும் 4,லட்சத்து 20,000  பேர் உயிரிழக்கின்றனர். இவற்றுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், சென்னை ஐஐடி நவீன பாக்டீரியா எதிர்ப்பு  தாளினை வடிவமைத்துள்ளது இது குறித்து ஐ.ஐ.டி பேராசிரியர் முகேஷ் டோபிள் கூறுகையில், தங்களின் கண்டுபிடிப்பு திடக்கழிவு மற்றும் உணவு மாசுபாடு ஆகிய இரண்டு முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
மேலும் தாங்கள் உருவாக்கிய இந்த தாள்   பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று தெரிவித்துள்ளார்..
பாக்டீரியா எதிர்ப்பு தாள் . ஸ்டார்ச், பாலிவினைல் ஆல்கஹால், போன்றவற்றினால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Published by:Gunavathy
First published: