• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பைக்கில் சவாரி வந்த இளைஞரிடம் பாலியல் தொல்லை.. செல்போன் பறிப்பு: பைக் டாக்சி ஓட்டுநர் கைது

பைக்கில் சவாரி வந்த இளைஞரிடம் பாலியல் தொல்லை.. செல்போன் பறிப்பு: பைக் டாக்சி ஓட்டுநர் கைது

பைக் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ்குமார்.

பைக் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ்குமார்.

பைக் டாக்சியில் பயணித்த வாலிபரிடம் பாலியல் தொல்லை கொடுத்து, செல்போன் பறித்த பைக் டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
சென்னை அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கேசவதன்ராஜ் (21). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகின்றார். இந்த நிலையில், நேற்று முந்தினம் இரவு கேசவதன்ராஜ் தனது நண்பர் அருண் என்பவரைச் சந்திக்க பெரம்பூர் பகுதிக்குச் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்குச் செல்வதற்காக ரேபிடோ பைக் டாக்ஸியை புக் செய்து பெரம்பூரிலிருந்து அதன் மூலம் வந்துள்ளார்.

பைக் டாக்ஸி ஓட்டுநர் திடீரென்று இருசக்கர வாகனத்தை அயனாவரம் ரயில்வே குடியிருப்பு மைதானம் அருகே நிறுத்திவிட்டு, கேசவதன்ராஜுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த கேசவதன்ராஜை பைக் ஓட்டுநர் தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த சுமார் 22,000 மதிப்பிலான செல்போனை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தை எடுத்து தப்பியோடி உள்ளார்.

Also read: வீட்டுக்கு விளையாட அழைத்து சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - 9 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது

இது தொடர்பாக கேசவதன்ராஜ் ஐ.சி.எப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் நேற்றிரவு ரேபிடோ பைக் டாக்சி ஓட்டுநரைக் கைது செய்தனர். விசாரணையில், அவர் கொளத்தூர் அம்பேத்கர் நகர் 3வது தெருவைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (23) என்பது தெரியவந்தது.
மேலும், BCA பட்டதாரியான இவர், கடந்த மார்ச் மாதம் ராஜமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தன்னை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி அவரது இருசக்கர வாகனத்தை ராஜேஷ்குமார் எரித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு ராஜமங்கலம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதையும் அறிந்துகொண்ட போலீசார், ராஜேஷ்குமாரை சிறையில் அடைத்தனர்.















ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: