சாலையில் நடந்து செல்லும் பெண்களை வைத்து சிறுவனுக்கு செயின் பறிக்க பயிற்சி... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

ஐஸ்ஹவுஸ் போலீசார் புகார் அளித்த ஆறு மணி நேரத்திற்குள் மூன்று குற்றவாளிகளை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாலையில் நடந்து செல்லும் பெண்களை வைத்து சிறுவனுக்கு செயின் பறிக்க பயிற்சி... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சிசிடிவி காட்சிகள்
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 10:01 PM IST
  • Share this:
சென்னையில் பெண்களிடம் செயின் பறிக்க சிறுவர்களுக்கு பயிற்சி அளித்த சம்பவம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் துறைமுகத்தில் உள்ள மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இரவு வேலைகளை முடித்துவிட்டு சுமார் 8 மணி அளவில் பார்த்தசாரதி சாமி தெருவில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னாலிருந்து வந்த இளைஞர் ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க நகையை பறித்து விட்டு தப்பி ஓடினார். சிறிது தூரம் ஓடிய அந்த இளைஞன் மற்றொரு நபரிடம் சென்று கொடுத்துவிட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.


இதனைத் தொடர்ந்து ஐஸ் அவுஸ் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். திருவல்லிக்கேணியை சேர்ந்த விஜய் என்ற சொறி விஜய் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் என மூன்று பேர் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து இவர்கள் மூவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர் .விசாரணையில் விஜய் என்ற சொறி விஜயும், சக்திவேலும் இருவரும் இணைந்து 17 வயது சிறுவனுக்கு எப்படி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட வேண்டும் என்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட தாகவும், அதன் அடிப்படையில் அந்த சிறுவன் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்ட தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஐஸ்ஹவுஸ் போலீசார் புகார் அளித்த ஆறு மணி நேரத்திற்குள் மூன்று குற்றவாளிகளை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கைது செய்யப்பட்டுள்ள சொறி விஜய் பலமுறை குற்ற வழக்குகளில் ஈடுப்பட்டு சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading