மனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்
சென்னையில் மனைவி மீது கொண்ட கோபத்தில் பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸ் பற்ற வைக்க முயன்ற கணவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுப்பட்ட மாயவன்.
- News18 Tamil
- Last Updated: August 8, 2020, 10:16 PM IST
சென்னை நொளம்பூர் ஏரி ஸ்கீம் 6வது தெரு பகுதியில் வசித்து வருபவர்கள் மாயவன் - அமுதா தம்பதியர். இவர்களுக்கு 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், அமுதா திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்தப் புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஷோபாராணி சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்ய சென்றபொழுது, தனது இரண்டு மகள்களோடு வீட்டிற்குள் சென்று தாழிட்டுக் கொண்ட மாயவன் கேஸ் சிலின்டரை நடு வீட்டில் வைத்து திறந்து வைத்துக் கொண்டு கொளுத்திக்கப் போவதாக மிரட்டியுள்ளார்.
Also read: இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு சம்பவ இடத்துக்கு ஜெ.ஜெ நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்த சென்ற இரண்டு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் நொளம்பூர் காவல்துறையினர் கதவை உடைத்துச் சென்று அவர்களை மீட்டனர்.
பின்னர் மாயவன் தனது மனைவி மீது இருந்த கோபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுப்பட்டார். இதனால் மாயவனை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தப் புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஷோபாராணி சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்ய சென்றபொழுது, தனது இரண்டு மகள்களோடு வீட்டிற்குள் சென்று தாழிட்டுக் கொண்ட மாயவன் கேஸ் சிலின்டரை நடு வீட்டில் வைத்து திறந்து வைத்துக் கொண்டு கொளுத்திக்கப் போவதாக மிரட்டியுள்ளார்.
Also read: இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு