திருமணமான 10 மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை.. கணவரும் விபரீத முடிவு

வீட்டில் யாரும் இல்லாதபோது மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே மின்விசிறியில் அதே துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்து கொண்டார்.

  • News18 Tamil
  • Last Updated: September 19, 2020, 11:54 PM IST
  • Share this:
சென்னையில் திருமணமான பத்து மாதங்களிலேயே மனைவி தற்கொலை செய்து கொண்டதால் கணவரும் தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மயிலாடுதுறையை சேர்ந்த புதுமணத் தம்பதியினர் மணிகண்டன்(35),  ராதிகா(29). இவர்களுக்கு 10 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. பணி நிமித்தம் காரணமாக இருவரும் சென்னை மேற்கு மாம்பலம் ராஜாஜி தெருவில் தனியார் குடியிருப்பில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர்ம்.

மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரசாயன நிறுவனத்தில் குவாலிட்டி மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ராதிகா கீழ்பாக்கத்திலுள்ள உள்ள தனியார் ஃபைனான்சியல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருந்துள்ளார்.


இந்த நிலையில் இருவருக்குள்ளும்  மனக்கசப்பு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மணிகண்டனுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே பிரச்சனை அதிகரித்துள்ளது. 15 நாட்களுக்கு முன்னதாக ராதிகா மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று விட்டார். அங்கிருந்து அவரது மனைவிக்கு பலமுறை போன் செய்துள்ளார். அவரது மனைவி போன் எடுக்காததால், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விவரத்தைக்கூறி தனது மனைவியை போனை எடுக்க சொல்லும்படி கூறியுள்ளார்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் மணிகண்டன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ராதிகா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.தகவலறிந்த மணிகண்டன் வீட்டிற்கு வந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது ராதிகா தற்கொலை செய்து கொண்ட அதே மின்விசிறியில் அதே துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்து கொண்டார்.தகவலறிந்த அசோக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரின் உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  மேலும் திருமணமாகி 10 மாதங்கள்தான் ஆகியுள்ள நிலையில் இந்த வழக்கானது ஆர்.டி.ஓ விசாரணைக்காக உத்தரவிடப்பட்டுள்ளது.

தம்பதியினர் தற்கொலைக்கு என்ன காரணம் என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  திருமணமான பத்தே மாதத்தில் புதுமணத் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டுள்ள இந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: September 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading