நடத்தையில் சந்தேகம் - மனைவியை கொலை செய்த கணவர்

சென்னையில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியைக் கணவனே குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. சடலத்தின் அருகிலேயே அமர்ந்திருந்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடத்தையில் சந்தேகம் - மனைவியை கொலை செய்த கணவர்
மனைவியை கொலை செய்த கணவர்
  • Share this:
சென்னை மகாகவி பாரதி நகர் 17வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் 32 வயதான சார்லஸ் ராஜ்குமார். முதல் மனைவியை விட்டுப் பிரிந்த இவர், வியாசர்பாடியைச் சேர்ந்த 35 வயது ரமணி என்ற பெண்ணை 2019ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

திருமணம் ஆன நாள் முதல் இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரமணி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விடுவார்.

சார்லஸ் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்துவார். இது தம்பதி இடையே வழக்கமாக நடந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமணி மீண்டும் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.


செவ்வாய்க்கிழமை மாலை மனைவியை சமாதானப்படுத்தி தனது வீட்டுக்கு அழைத்து வந்தார் சார்லஸ். பின்னர் தனது அம்மாவை வெளியே அனுப்பி விட்டு மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மனைவியை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் விழுந்த ரமணி துடிதுடித்து அதே இடத்தில் உயிரிழந்தார் அக்கம்பக்கத்தினர் ரமணியின் அலறல் சத்தம் கேட்டு எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த எம்கேபி நகர் போலீசார் ரமணியின் உடல் அருகே அமர்ந்திருந்த சார்லஸ் ராஜ்குமாரை கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரமணிக்கு வியாசர்பாடியைச் சேர்ந்த வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக சார்லஸ் கூறியுள்ளார்.

 

மேலும் படிக்க...

திருப்பூரில் பேஸ்புக்கில் நேரலை செய்து தற்கொலை செய்துகொண்ட நபர்

அதுகுறித்து பலமுறை கண்டித்தும் ரமணி கேட்காமல் போகவே, ஆத்திரத்தி்ல் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் சார்லஸ்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading