சென்னையில் விநாயகர் சிலை நிறுவ இந்து முன்னணி ஏற்பாடு - பந்தகாலை அகற்றிய போலீசார்

சென்னை திருவல்லிக்கேணியில் விநாயகர் சிலை வைக்க இந்து முன்னணி அமைப்பினர் பந்தக்கால் நட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

சென்னையில் விநாயகர் சிலை நிறுவ இந்து முன்னணி ஏற்பாடு - பந்தகாலை அகற்றிய போலீசார்
பந்தக்கால்
  • News18
  • Last Updated: August 18, 2020, 9:07 AM IST
  • Share this:
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு பொது இடங்களில் சிலை நிறுவவோ, ஊர்வலம் செல்லவோ தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தடையை மீறி சிலை வைத்து வழிபாடு நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பு அறிவித்தது.

மேலும், விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த பாஜகவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி சன்னதி தெருவில் உள்ள விநாயகர் கோவில் முன்பு, விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக சிலை நிறுவ பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.





இந்து முன்னணி சென்னை மாநகர தலைவர் இளங்கோவன் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்து முன்னணி அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தி கொடியை அப்புறப்படுத்தினர்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading