Home /News /tamil-nadu /

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை அனுகவில்லை. கொரோனா தடுப்பு விதிமுறையாக பின்பற்றி தேர்தல் நடத்த வேண்டும். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது வேட்பாளருடன் 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால்  உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தது.

    கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக் கோரி ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.நேற்று இந்த வழக்கு விசாரணை வந்தது. அப்போது, இரண்டாவது அலை அளவுக்கு தற்போது நிலவரம் மோசமாக இல்லை என்று கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி  தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    5 மாநில சட்டப்பேரவை தேர்தலே நடத்தப்படுகிறது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தனர். அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால்  உத்தரவு பிறப்பிக்க முடியாது . இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் அனுக வேண்டும்.

    தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை அனுகவில்லை. கொரோனா தடுப்பு விதிமுறையாக பின்பற்றி தேர்தல் நடத்த வேண்டும். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது வேட்பாளருடன் 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று தெரிவித்தது.

    இதையும் படிங்க: நடிகர் விஜய் குறித்த நீதிபதியின் எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்- சென்ன உயர் நீதிமன்றம்

    மேலும்,  வழக்கை முடித்து வைக்காமல் நிலுவையில் வைத்து இருப்போம்; விதிமுறைகள் முறையாக பின்பற்ற படுகிறதா என்பதை கண்காணிப்போம். விதிமீறல்கள் இருந்தால் மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai High court, Local Body Election 2022

    அடுத்த செய்தி