Home /News /tamil-nadu /

குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவரை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டது செல்லும் - நீதிமன்றம்

குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவரை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டது செல்லும் - நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

இதை ஏற்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும்,  மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கத்தை  ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு  தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சரஸ்வதி என்பவரையும், சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளிகுமார் உள்ளிட்ட உறுப்பினர்களையும் நீக்கி   2022 ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்க ஆணையத்தின் செயலாளருக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி மற்றும் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஸ், ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்குவதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, குழந்தைகள் உரிமைகள் சட்டப்படி ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்  நியமனத்தை ரத்து செய்தது சட்ட விரோதம்என்று கூறி அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கயூட்யூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு  பொறுப்புத்  தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜி ரவீந்திரன், ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான குழந்தைகள் உரிமை சட்டப்பிரிவையும், நீக்குவதற்கு தொடர்பான சட்டப்பிரிவையும் கருத்தில்  கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும்,  ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்க அரசுக்கு  அதிகாரம் உள்ளதாகவும் கூறி, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும்,  மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
Published by:Salanraj R
First published:

Tags: HighCourt

அடுத்த செய்தி