பாஜக பிரமுகர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு ரத்து...

பாஜக பிரமுகர் கல்யாணராமன்

கல்யாணராமனை குண்டர்சட்டத்தில் கைது செய்ததை ரத்துசெய்யக்கோரி அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 • Share this:
  கோவை மேட்டுப்பாளையத்தில் ஜனவரி மாதம்  நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகி கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து அவதூறான வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக, கல்யாணராமனை போலீசார் கைதுசெய்தனர்.

  தமிழகம் முழுவதும் அவர் மீது புகார்கள் குவிந்ததால் அவர் மீது குண்டர் சட்டம் உட்பட பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கல்யாணராமன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. கோவை மாவட்ட எஸ்.பியின் பரிந்துரையின் பேரில் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் கல்யாணராமனை மீது போடப்பட்டிருந்த குண்டர்சட்டத்தை எதிர்த்து அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.  இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது பா.ஜ.க பிரமுகர் கல்யாணராமன் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் தவறானது. அவதூறாக பேசியதற்காக குண்டர் சட்டம் போட எந்த விதிகளும் இல்லை என அவரது தரப்பில் வாதம் எடுத்துவைக்கப்பட்டது.  இதனையடுத்து கல்யாணராமன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: