பொள்ளாச்சி பாலியல் வழக்கின் சி.பி.ஐ. விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் - நீதிபதிகள்

வருகிற நவம்பர் 4-ந்தேதிக்கு வழக்கை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் சி.பி.ஐ. விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் - நீதிபதிகள்
பொள்ளாச்சி வழக்கு
  • News18
  • Last Updated: October 16, 2019, 2:52 PM IST
  • Share this:
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் சி.பி.ஐ. விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள், இளம்பெண்கள் உள்பட ஏராளமான பெண்களை ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ படம் பிடித்து, அதை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்தது.

இதில் பாதிக்கப்பட் கல்லூரி மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.


பாதிக்கப்பட்ட மாணவியின் கதறல் வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில்,பாலியல் வழக்கின் சி.பி.ஐ. புலன் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் மேற்பார்வையிட வேண்டும் என்ற தமிழ்நாடு பெண்கள் வக்கீல்களுக்கான சங்கத்தின் தலைவர் கே.சாந்தகுமாரி பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத்கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பு புலன் விசாரணை நடுநிலையுடன் நடந்து வருவதாகவும். கைது செய்யப்பட்ட 5 பேருக்கு எதிராக இடைக்கால குற்றப்பத்திரிகையை கோவை தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கடந்த மே 23-ந்தேதி தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Loading...

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விரிவான அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். சிபிஐ புலன் விசாரணையை உயர்நீதிமன்றம் மேற்பார்வையிடும் என்றும் தெரிவித்த நீதிபதிகள் வருகிற நவம்பர் 4-ந்தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.

பார்க்க :

தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கழுத்தை நெரித்து கொலை!

First published: October 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com