தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ சம்பளத்தை வசூலிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

மக்கள் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை திரும்ப கேட்க செயலாளருக்கு சட்டரீதியாக எந்த அதிகாரமும் இல்லை வேல்துரை தரப்பு வாதம்.

Web Desk | news18
Updated: June 12, 2019, 9:18 PM IST
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ சம்பளத்தை வசூலிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
சென்னை உயர்நீதிமன்றம்
Web Desk | news18
Updated: June 12, 2019, 9:18 PM IST
தகுதி  நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. வேல்துரையிடம் இருந்து சம்பளத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வேல்துரை. அரசு ஒப்பந்தப் பணிகளை செய்து வந்ததாகக் கூறி, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி, அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வேல்துரையின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில்,  5 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக வேல்துரை பெற்ற சம்பளமான 21 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை திரும்ப செலுத்த சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டார்.

சட்டப்பேரவை செயலாளரின் உத்தரவை எதிர்த்து, வேல்துரை  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கார்த்திகேயன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மக்கள் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை திரும்ப கேட்க செயலாளருக்கு சட்டரீதியாக எந்த அதிகாரமும் இல்லை எனவும், சம்பளத்தை திரும்பப் பெற தடை விதிக்க வேண்டும் எனவும் வேல்துரை தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வேல்துரை பெற்ற சம்பளத்தை திரும்ப பெறும் விவகாரத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Also Watch: நடிகர் சங்கத்தேர்தல் என்னுடைய பாசையில் ஆட்டுப் புழுக்கை தேர்தல் - ராதாரவி
Loading...
First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...