• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுடப்ச் சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுடப்ச் சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

மத்திய அரசு கொண்டுவந்த புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

  • Share this:
    சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்துவந்த நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐக் கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவந்தது.

    இந்த விதிகளைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் மற்றும் பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன், கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த உத்தரவு நாடு முழுவதற்கும் பொருந்தும்’ என்று வாதிட்டார். அதற்கு பதிலளித்த டிஜிட்டல் பப்ளிஷர்ஸ் தரப்பு வழக்கறிஞர், ‘மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘மத்திய அரசு கண்காணிப்பு நடைமுறை மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்துவது, ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல்’ என்று கூறி புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்துக்கு இடைக்காலத் தடைவிதித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: