பீலா ராஜேஷூக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

பீலா ராஜேஷ்

நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  சென்னை ’கென்னல் கிளப்’ நிர்வாக நடவடிக்கைகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி அந்த நிறுவனத்திற்கு பத்திரப்பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கென்னஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

  எனினும், உத்தரவை மீறி முறைகேடு குறித்து விசாரிக்க 3 சிறப்பு அதிகாரிகளை நியமித்து பீலா ராஜேஷ் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான அவமதிப்பு வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பீலா ராஜேஷ், பத்திரப்பதிவுத்துறை பதிவாளர் மஞ்சுளாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இவர்கள் இருவரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா, நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா என சரமாரி கேள்வி எழுப்பினார். இது முழுக்கமுழுக்க நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் தெரிவித்தார்.

  Also read: அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை அதிமுக அரசு கண்டுகொள்ளவே இல்லை - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

  அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற கூடாது என எந்தவொரு உள்நோக்கமும் அதிகாரிக்குக் கிடையாது என்றும் நியமன உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறினார். அரசு பிறப்பித்த உத்தரவு திரும்பப் பெறப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி முடித்து வைத்து உத்தரவிட்டார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: