• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆட்கொல்லி புலி

ஆட்கொல்லி புலி

புலியை பிடிக்கும் நடவடிக்கை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.

  • Share this:
    நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் சுற்றிதிரியும் ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சி 11 ஆவது நாளாக தொடரும் நிலையில், MDT23 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் சுறித் திரியும் ஆட்கொல்லி புலி இதுவரை 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் 4 மனிதர்களையும் கொன்றுள்ளது. இந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புலியை வேட்டையாடி பிடிக்க தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவரும், இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

    குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர்கள் தரப்பில் MDT23 புலியை ஆட்கொல்லி புலியாக கருதி அறிவிக்கப் பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துவிட்டு, பின்னர் புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    வனத்துறை தரப்பில், தற்போது வரை புலியை கொல்லும் திட்டம் இல்லை என்றும், அதை உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், அந்த புலியின் கழுத்தில் ஏற்கனவே காயம் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், ஏற்கனவே நாட்டில் புலிக்ளின் எண்ணிக்கை குறைந்து வருவதை சுட்டிக்காட்டினர். மேலும், MDT23 புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமல் கூட இருக்கலாம் என்பதால், அதை உடனடியாக கொல்ல முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.

    Must Read : ஆட்கொல்லி புலியை பிடிக்க 11ஆவது நாளாக தேடுதல் பணி : டிரோனுடன் களமிறங்கியுள்ள வனத்துறையினர்

    புலியின் நடவடிக்கையை கண்காணித்து, அதை பிடித்த பிறகு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதை பிடிக்கும்போது மற்ற விலங்குகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். புலியை பிடிக்கும் நடவடிக்கை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: