செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் உற்பத்தி தொடங்க உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை உயர்நீதிமன்றம்

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் உற்பத்தி தொடங்க உத்தரவிட மறுப்பு தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

  • Share this:
செங்கல்பட்டு பகுதியில் செயல்பட்டுவரும் எச்.எல்.எல் (HLL) பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பை மேற்கொள்ளவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என. கோரிய மனு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை குத்தகைக்கு எடுத்து நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக, மாநில அரசு, மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம் என கூறிய நீதிமன்றம், எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த வெர்னிகோ மேரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தபோது,  சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ள நிலையில் என்ன விதிமுறைகள் அடிப்படையில் மதிப்பீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, செங்கல்பட்டு தடுப்பூசி ஆய்வகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டு, இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதிம் எழுதினார். அந்த கடிதத்தில், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும். கொரோனா தடுப்பூசி மையத்தை தமிழக அரசு ஏற்று தனியார் நிறுவன உதவியுடன் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்படுத்துவோம்” என்று கூறியிருந்தார்.

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசே ஏற்கவேண்டும் என பாமக இளைஞர் அணித்தலைவரும் முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார். அவர், “சென்னையை அடுத்த செங்கல்பட்டு நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, அங்கு உற்பத்தியை தொடங்குவது பற்றி கலந்தாய்வு நடத்தியுள்ளார்.

இது ஓர் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு என்றாலும் கூட, அந்த வளாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவதைத் தவிர, வேறு எந்த நடவடிக்கையாலும் தமிழகத்திற்கு பயன் கிடைக்காது என்று கூறியிருந்தார். இதேபோல செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Must Read : கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க தமிழக அரசு திட்டம்

இதற்கிடையில், செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தைத் தொடங்குவது குறித்து கருத்து கூறியிருந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன், செங்கல்பட்டு தடுப்பூசி மையம் மெக்கானிக் ஷாப் அல்ல. அதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து எப்போது துவங்கலாம் என தெரிவிப்பார்கள் என்று கூறியிருந்தார்.
Published by:Suresh V
First published: