வீரப்பனை வீழ்த்திய குழுவில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இரட்டைப் பதவி உயர்வு செல்லாது - உயர் நீதிமன்றம்

வீரப்பனை வீழ்த்திய குழுவில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இரட்டைப் பதவி உயர்வு செல்லாது - உயர் நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்.

காவல்துறைக்கு வழங்கப்பட்ட இரட்டைப் பதவி உயர்வு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    சந்தனக்கடத்தல் வீரப்பனை வீழ்த்தியதால் இரட்டை பதவி உயர்வு பெற்ற அதிரடிப்படையினருக்கு, இரட்டை பணி மூப்பு வழங்கும் வகையில் தமிழ்நாடு காவல் பணிகள் விதிகளில் திருத்தம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சந்தனக்கடத்தல் வீரப்பன், 2004 ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது, அதிரடிப்படையில் இருந்த 752 பேருக்கு இரட்டை பதவி உயர்வு வழங்கி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார். ஒருமுறை நடவடிக்கையாக பதவி உயர்வு வழங்கப்பட்ட போதும், அதன்பின்னும் 752 பேருக்கும் பணிமூப்பும் வழங்கப்பட்டது. இதனால் அதிரடிப்படையில் இடம் பெறாத பிற அதிகாரிகளும், காவலர்களும் பாதிக்கப்பட்டதால், 2007 ம் ஆண்டு திமுக ஆட்சியில், இரட்டை பதவிஉயர்வு பெற்றவர்களுக்கான பணிமூப்பை வழங்கி பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டது.

    இதை எதிர்த்து அதிரடிப்படையினர் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், 2013ம் ஆண்டு அதிரடிப்படையினருக்கு மீண்டும் பணிமூப்பு வழங்கும் வகையில், காவல் பணிகள் விதிகளில் திருத்தங்கள் கொண்டு வந்து புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், இந்த அரசாணை சட்ட முன்னுதாரணங்களுக்கு எதிரானது எனவும், அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனவும் கூறி, அதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: