ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரவுடி பேபி சூர்யாவின் டிக்டாக் காட்சிகளை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி... குண்டர் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

ரவுடி பேபி சூர்யாவின் டிக்டாக் காட்சிகளை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி... குண்டர் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

ரவுடி பேபி சூர்யா

ரவுடி பேபி சூர்யா

தன் மீது காழ்ப்புணர்ச்சியோடு குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக ரவுடி பேபி சூர்யா தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரவுடி பேபி சூர்யாவின் டிக்டாக் காட்சிகளை பார்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சியடைந்ததோடு, அவர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கில் தற்போது எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி. டிக் டாக்  செயலி தடை செய்யப்பட்ட பின்னர், யூடியூப் செயலி, ஃபேஸ்புக் ரீல்ஸ் ஆகியவற்றில் அவர் வீடியோ வெளியிட தொடங்கினார். அவரது வீடியோக்கள் ஆபாசமாகவும், அருவருப்பானதாகவும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆபாசமாக தகாத முறையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் ரவுடி பேபி சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

இந்நிலையில், காழ்புணர்ச்சியோடு அளிக்கப்பட்ட புகாரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக கூறி சூர்யா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி என் பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காரமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசியுள்ளதாகவும்,அவர் பேசிய வீடியோக்களை நீதிபதிகள் பார்க்க வேண்டும் என்று தெரிவித்து லேப்டாப் மூலம் நீதிபதிகளிடம் டிக் டாக் காட்சிகளை காண்பித்தார்

கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ்.

இதையும் படிங்க: ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்- விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சில காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், வழக்கில் முகாந்திரம் உள்ளதாகவும், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

First published:

Tags: Chennai High court, Rowdy baby, Suriya