காவலர்களுக்கு விடுமுறை:  தமிழக அரசு நிலைப்பாடு குறித்து நீதிமன்றம் கேள்வி

news18
Updated: July 12, 2018, 10:36 PM IST
காவலர்களுக்கு விடுமுறை:  தமிழக அரசு நிலைப்பாடு குறித்து நீதிமன்றம் கேள்வி
சென்னை உயர்நீதிமன்றம்
news18
Updated: July 12, 2018, 10:36 PM IST
காவலர்களுக்கு வார விடுமுறை அளிப்பது குறித்து,  தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது .

காவல்துறையினரின் பணிச்சுமை குறைப்பு, ஆர்டர்லி முறை ஒழிப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த  உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், காவல் துறையினருக்கு வாரம் ஒருநாள்  விடுப்பு வழங்குவது குறித்து பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு  உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று வந்தது. இந்த வழக்கில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டரில்  கவல்துறையினருக்கு  வார விடுப்பு வழங்க வகை செய்துள்ளதாகவும், வார விடுப்பு நாளில் பணிக்கு வரும் காவலர்களுக்கு,  200 ரூபாய் கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டு  வருவதாகவும் தெரிவித்தார்.

வாரம் 200 ரூபாய் தருவதாக இருந்தால் யாரும் விடுப்பு எடுக்க மாட்டார்கள் என்று கூறிய நீதிபதி கிருபாகரன் , காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஏன் ஒரு நாள் விடுப்பு அளிக்கக்கூடாது என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக  விரிவான விளக்கத்தை தாக்கல் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டார்.

மேலும், போக்குவரத்து காவல்துறையினர் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதால் அவர்களின் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்ட நீதிபதி கிருபாகரன்,  காவல்துறையில் பிற பணிகளில் ஈடுபடும் காவலர்களையும், வாரத்தில் ஒரு நாளாவது தங்கள் குடும்பத்துடன் செலவிட அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

விடுப்பு நாட்களில், பணிக்கு வரும் காவலர்களுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் என்ற விதியை ஒரு வாரத்திற்கு மட்டுமே கடைபிடிக்க முடியுமா என்பதை,  அரசிடம் கேட்டு விளக்குமாறு கூறி, 19 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி கிருபாகரன்.

இதுதவிர வாகனங்களில் கட்சிக் கொடி, அரசியல் தலைவர்களின் படங்கள், அரசியல் பொறுப்புகள் போன்ற பலகைகளை வைத்திருப்பதை கட்டுப்படுத்த முடியுமா என்பதை பரிசீலிக்குமாறு, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தினார்.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...