Home /News /tamil-nadu /

எந்த அடிப்படையில் நளினிக்கு ஜாமீன் தர முடியும் - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

எந்த அடிப்படையில் நளினிக்கு ஜாமீன் தர முடியும் - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

நளினி

நளினி

Nalini RajivGandhi Case Convict: எந்த மேல் முறையீட்டு வழக்கும் நிலுவையில் இல்லாத நிலையில் எந்த சட்டப்பிரிவின் கீழ் நளினி ஜாமீன் கோர முடியும் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்

    ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியாக உள்ள நளினிக்கு ஜாமின் வழங்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

    ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பேரறிவாளன் வழக்கில் முடிவு எட்டப்பட்ட பின்னர் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு கூறியது.

    Also Read:  இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக படையெடுக்கும் தமிழர்கள்.. இலங்கை பொருளாதார நெருக்கடியால் அவலம்...

    வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நளினி தரப்பு ஜாமீன் கோரியது. அதற்கு, எந்த மேல் முறையீட்டு வழக்கும் நிலுவையில் இல்லாத நிலையில் எந்த சட்டப்பிரிவின் கீழ் ஜாமீன் கோர முடியும் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.  மேலும் உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறிய தலைமை நீதிபதி, மனுதாரர் உச்சநீதிமன்றத்தை தான் அணுக முடியும் எனவும் தெரிவித்தனர்.

    குற்ற விசாரணை முறைச்சட்டத்தின் படி, முன் ஜாமீன் கோரலாம், கைது செய்யப்பட்டால் ஜாமீன் கோரலாம், தண்டிக்கப்பட்டால், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் கோரலாம். ஆனால் மேல் முறையீட்டு வழக்கு ஏதும் இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் ஜாமீன் கோர முடியும் என்றார். உச்சநீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது எனவும், பின்னர், நளினி தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று மனு மீதான விசாரணையை மார்ச் 24 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai High court, Nalini, Rajiv Gandhi Murder case

    அடுத்த செய்தி