Home /News /tamil-nadu /

குட்கா விவகாரம்: 2 ஆவது உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

குட்கா விவகாரம்: 2 ஆவது உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

2017 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட முதல் நோட்டீசை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏ-க்களுக்கு எதிராக பேரவை உரிமைக்குழு அனுப்பிய 2ஆவது நோட்டீஸை ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயனா உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டில் தடைசெய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்றதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி தலைமையிலான அமர்வு, திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டது.

    அதன்பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமை மீறல் குழு, திமுக, எம்எல்ஏக்களுக்கு 2வது முறையாக நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்தும் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உரிமை மீறல் நோட்டீஸ் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதனை எதிர்த்து சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற காரணத்திற்காக மட்டுமே, உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியதாகவும், தேவைப்பட்டால் புதிதாக உரிமைக் குழு அமைத்துக் கொள்ளட்டும் என்றும் திமுக தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், பேச்சுரிமை என்ற போர்வையில் தடை செய்யப்பட்ட பொருளை ஊக்குவிக்கும் வகையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் செயல்பட்டதாக உரிமை குழு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

    உரிமைக் குழு பரிந்துரை மீது சட்டப்பேரவை இறுதி முடிவெடுத்து, அதனை எதிர்த்து வழக்கு தொடரும்பட்சத்தில் தான் நீதிமன்றம் தலையிட முடியும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பினர் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏ-க்களுக்கு எதிராக பேரவை உரிமைக்குழு அனுப்பிய 2ஆவது நோட்டீசை ரத்து இன்று தீர்ப்பளித்தார்.

    மேலும் படிக்க... பாஜக-வின் சக்தி வாய்ந்த 'ஐடி'பிரிவை எதிர்கொள்ள தயாராகும் ராகுல் காந்தி: காங்கிரஸ் ஐடி பிரிவுக்கு 5 லட்சம் கீபோர்டு போராளிகளைத் தேர்வு செய்ய முடிவு

    2017 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட முதல் நோட்டீசை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: DMK, Madras High court, MK Stalin

    அடுத்த செய்தி