Home /News /tamil-nadu /

கூட்டுறவு சங்கங்களின் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு சங்கங்களின் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

இந்த உத்தரவை 8 வாரத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின், அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கூட்டுறவு சங்கங்களில் தற்காலிகமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை அரசு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார்.

    இந்த உத்தரவு, வழக்கு தொடர்ந்த கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல், வழக்கு தொடராத தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும், இதேபோன்ற தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

    Must Read : அதிமுக, திமுக பின்னால் ஏன் எல்லோரும் போகவேண்டும்? : கூட்டணி ஆட்சியை விரும்பும் கிருஷ்ணசாமி

     

    மேலும் இந்த உத்தரவை 8 வாரத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai High court, Government Employees

    அடுத்த செய்தி