Home /News /tamil-nadu /

டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக்

டாஸ்மாக்

TASMAC Bar : அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி என்றும், பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் பார் டெண்டர் புதிய விதிகளை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஏற்கனவே பார் வைத்திருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும் நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றிதழ் ஏற்கனவே தங்கள் பெற்றுள்ளதாகவும் ஆனால் தங்களுக்கு எந்த ஒரு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன், பார் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதங்களில் மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

    மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளை ஒட்டி அமைக்கப்படும் பார்களில் மது அருந்த தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் அனுமதிக்கவில்லை எனவும், தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதி, டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பார்களை நடத்த இந்த சட்டம் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    Read More : திமுகவில் அன்பழகனின் மகன்... திருவொற்றியூர் தனியரசு உள்ளிட்டோருக்கு சீட்

    மேலும், பொது இடங்களில் போதையில் இருக்கும் நபர்களுக்கு 3 மாத சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பார்களில் மதுபானம் அருந்திய நபர்களை பொது இடங்களில் நடமாட அனுமதிப்பது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    Must Read : நீட் என்றால் என்ன? தமிழ்நாடு எதிர்க்க காரணம் என்ன?

    பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதி, டாஸ்மாக் கடைகளுக்கு இடத்தை குத்தகைக்கு வழங்குபவர்கள், அருகில் உள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai High court, Tasmac

    அடுத்த செய்தி