ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு: ஜெ.தீபா, தீபக் ஆகியோரை சேர்க்க நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு: ஜெ.தீபா, தீபக் ஆகியோரை சேர்க்க நீதிமன்றம் உத்தரவு

ஜெ.தீபா- ஜெ.தீபக்

ஜெ.தீபா- ஜெ.தீபக்

ஜெயலலிதா கடந்த 2008, 2009 ம் ஆண்டுக்கான செல்வ வரி (wealth tax) தொடர்பான கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி வருமான வரித்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். ஜெயலலிதா காலமாகி விட்டதால் ,அவரது வாரிசுகளான தீபக், தீபாவை வழக்கில் சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலமாகி விட்டதால் அவருக்கு எதிரான செல்வ வரி தொடர்பான வழக்கில் தீபக், தீபாவை சேர்க்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2008 ,2009 ம் ஆண்டுக்கான செல்வ வரி (wealth tax) தொடர்பான கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். செல்வ வரி சட்டம் 35வது பிரிவின் கீழ் இந்த வழக்குப் பதிவானது.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்ககோரி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2008'ஆம் ஆண்டு

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் அவரை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் நீதிபதிகள் ஆர் மகாதேவன், முகமது சபீக் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது . அப்போது ஜெயலலிதா காலமாகி விட்டதால் , அவரது வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவை வழக்கில் சேர்க்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை இரண்டு வாரம் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

First published:

Tags: Chennai High court, J Deepa, Jayalalitha