அமைச்சர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்காக டிராஃபிக் : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர்களின் தேர்தல் பிரச்சாரத்தின்போது சாதாரண மக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நீண்ட நேரத்திற்கு நிறுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    அமைச்சர்களின் தேர்தல் பிரச்சாரத்தின்போது சாதாரண மக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நீண்ட நேரத்திற்கு நிறுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை உயர் நீநிமன்றத்தில், வழக்கறிஞர் எம்.ஞானசேகர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு செல்லும் இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டமும் தடுக்கப்படுகிறது.

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றம் ஆகியவை முழுவதுமாக திறக்கப்படவில்லை. இங்கு மக்கள் கூடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் பிரசார கூட்டங்களில், கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது இல்லை.

    எனவே, முதலமைச்சர், அமைச்சர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பிரசார இடங்களில் பொதுமக்களையும், போக்குவரத்தையும் தடுத்து நிறுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஒரு சில நிகழ்வுகளை மட்டுமே குறிப்பிட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனாலும், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரும்போது போக்குவரத்து தடைகளுக்கான விதிகளை காவல்துறையினர் பின்பற்ற வேண்டும்.

    முதலமைச்சர், அமைச்சர்களின் பிரச்சாரங்களில் சாதாரண மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது. போலீசார், போக்குவரத்தை ஒட்டுமொத்தமாக நீண்ட நேரத்துக்கு நிறுத்தக்கூடாது” என்று உத்தரவிட்டனர்.

    Must Read : திருச்சியில் எம்.எல்.ஏ மகன் காரிலிருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்

     

    தமிழக சட்டமன்ற தேர்தல் இம்மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரம் 4 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: