• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கும் மாதம் ரூ.3000 உதவித்தொகை: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கும் மாதம் ரூ.3000 உதவித்தொகை: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை, சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கும் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டப்படிப்பு முடித்து வெளி வரும் இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், அரசு சட்டக் கல்லூரிகளுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும் எனவும், ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் இன் லா எனும், சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கறிஞர் கற்பகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... கொங்கு நாடு கோரிக்கை: அக்கறையா, அரசியலா?  

Job Vacancy: தமிழ்நாடு குழந்தைகள் நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ஒப்பந்த அடிப்படையில் வேலை-விண்ணப்பிக்க முழு விவரம்

அந்த மனுவில் இதுசம்பந்தமான அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் சீர்மிகு சட்டப் பள்ளியில்  சட்டம் படித்தவர்களுக்கும் உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, அரசு சட்டக் கல்லூரி என்பது அரசால், அரசு நிதியுதவியால் நடத்தப்படுவது. அந்த வகையில் சீர்மிகு சட்டப் பள்ளியும், அரசால் நிர்வகிக்கப்படுவதால் அதுவும் அரசு சட்டக் கல்லூரிதான் எனக் கூறி அந்த கல்லூரியில் படித்து வழக்கறிஞர்களாக பதிவு செய்கிறவர்கள் பிற நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் உதவித்தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: