கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் : தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் : தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா..

  • Share this:
    அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என ஆராய்ந்து உடனடியாக உத்தரவுகளை பிறப்பிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் பல வாக்குறுதிகளை அளிப்பதுண்டு. இது சம்பந்தமாக அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள், நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என ஆய்வு செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

    இந்த உத்தரவின்படி, தேர்தல் அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த 2016ம் நடந்த சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தேர்தல் அறிக்கைகள் மீது 2016 ஆகஸ்ட் மாதம்தான் தேர்தல் ஆணையம் உத்தரவுகள் பிறப்பித்ததாகவும், தற்போது கால தாமதம் படுத்தாமல் உடனடியாக உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

    Must Read : வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

     

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு மார்ச் 15ம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
    Published by:Suresh V
    First published: