Home /News /tamil-nadu /

ராஜேந்திர பாலாஜியை சுற்றும் வழக்குகள்.. ஜாமீன் கேட்டு விண்ணப்பம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ராஜேந்திர பாலாஜியை சுற்றும் வழக்குகள்.. ஜாமீன் கேட்டு விண்ணப்பம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

அரசியல் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டதாக ராஜேந்திர பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அரசு வேலை வாங்கி மோசடி செய்த புகார் மட்டுமல்லமால், கொலை முயற்சி குற்றச்சாட்டும் இருப்பதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜேந்திர பாலாஜிக்கு பணம் பெற்று தந்தவரான விஜய் நல்லதம்பி மற்றும் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்ட ரவீந்திரன் ஆகியோரும் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.

    இந்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், தங்களுக்கு எதிராக புகார் அளித்த நல்லதம்பி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி உள்ளிட்ட பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    Also Read:  முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு - உயர் நீதிமன்றம்

    இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, வேலைக்கான பணம் வாங்கியது தவிர, கொலை திட்டத்திலும் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிவித்தார். இரு வழக்கிலும் முன் ஜஈமீன் வழங்கக்கூடாது என புகார்தாரர்கள் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய இருப்பதால், வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி, புகார் அளித்த விஜய் நல்லத்தம்பியின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் என்றும், காவல்துறை உரிய நோட்டீஸ் வழங்காமல், கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அரசியல் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவுசெய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.

    Also Read: இளம்பெண்ணின் கழுத்துக்குள் குத்திய 7.5 செ.மீ தையல் ஊசி.. லாவகமாக அகற்றிய கோவை மருத்துவர்கள்

    இதையடுத்து, இடையீட்டு மனுதாரர்கள் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்துடன், அதுவரை ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, Chennai High court, Corruption allegations, Rajendra balaji

    அடுத்த செய்தி