Home /News /tamil-nadu /

Prank Show எடுக்க வெளியிட உயர் நீதிமன்றம் தடை!

Prank Show எடுக்க வெளியிட உயர் நீதிமன்றம் தடை!

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

'தவறான செயலிகளால், ஆன்லைன் விளையாட்டுகளால் நமது குழந்தைகளும் இளைஞர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். '

  • News18
  • Last Updated :
Prank Show எனப்படும் விளையாட்டுத் தனமான வீடியோக்களை எடுக்கவும் வெளியிடவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இதுதொடர்பாக ஒரு பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், “Tik Tok செயலியால் இன்று பல அபாயங்கள் உருவாகி வருகின்றன. சிறியவர், பெரியவர் என வித்தியாசமில்லாமல் மக்கள் உபயோகித்து வரும் இந்த சீன செயலியால் சில நேரங்களில் உயிரிழப்பு அபாயம் வரையில் ஏற்படுகிறது.

இதன் காரணமாகவே இந்தச் செயலியை இந்தோனேஷியாவில் தடை செய்துள்ளனர். அதேபோல், இந்தச் செயலிக்கு இந்தியாவிலும் தடைவிதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு மீதான விசாரணையை விசாரித்த நீதிபதிகள், ”தவறான செயலிகளால், ஆன்லைன் விளையாட்டுகளால் நமது குழந்தைகளும் இளைஞர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான ’ப்ளூ வேல்’ கேம் குறித்து நீதிமன்றம் தலையிட்ட பின்னர் தான் மத்திய அரசு அந்த விளையாட்டுக்குத் தடை விதித்தது.

இதுபோல் சமூகத்துக்கு தீங்கு விதிக்கும் செயலிகளை அரசே முன்வந்து தடைவிதிக்க வேண்டும். Prank show போன்ற வீடியோக்களை எடுக்கவும் வெளியிடவும் தடை விதிக்கப்படுகிறது” என அறிவித்தனர்.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.











மேலும் பார்க்க: நீட் தேர்வு ரத்து...! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் என்ன?
Published by:Rahini M
First published:

Tags: Chennai High court, Prank show, Tik Tok

அடுத்த செய்தி