ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மக்களவை தேர்தலின்போது ரூ.11.48 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்... திமுக எம்பி கதிர் ஆனந்திடம் வரி வசூலிக்க தடை

மக்களவை தேர்தலின்போது ரூ.11.48 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்... திமுக எம்பி கதிர் ஆனந்திடம் வரி வசூலிக்க தடை

கதிர் ஆனந்த்

கதிர் ஆனந்த்

விமலாவின் வீட்டில் 11 கோடியே 48 லட்ச ரூபாயை வருமான வரித்துறையினர் கைப்பற்றியிருந்தனர். அந்த பணம் கதிர் ஆனந்தின் வருமானம் என அறிவித்ததுடன், அதற்கான வரியை செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மக்களவை தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட 11.48 கோடி ரூபாய் திமுக எம்.பி. கதிர் ஆனந்திற்கு சொந்தமானது எனக் கூறி, அதற்கு வரி வசூலிக்கும் வருமான வரித்துறை நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகங்களிலும், அவருடன் தொடர்புடையவர்கள் என தாமோதரன், விமலா ஆகியோர் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

அப்போது விமலாவின் வீட்டில் 11 கோடியே 48 லட்ச ரூபாயை வருமான வரித்துறையினர் கைப்பற்றிய நிலையில், அந்த பணம் தன்னுடையது என அவரது சகோதரர் சீனிவாசன் உரிமை கோரி இருந்தார். ஆனால் அந்த பணம் கதிர் அணந்தின் வருமானம் என ஏன் அறிவிக்கக்கூடாது என்று விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை கதிர் ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கு கதிர் ஆனந்த் தரப்பில் விளக்கம் அளித்த பின்னரும், அதை நிராகரித்துவிட்டு, அந்த பணம் கதிர் ஆனந்தின் வருமானம் என அறிவித்ததுடன், அதற்கான வரியை செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு: ஜெ.தீபா, தீபக் ஆகியோரை சேர்க்க நீதிமன்றம் உத்தரவு

இந்த உத்தரவை எதிர்த்து கதிர் ஆனந்த் தொடர்ந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் உரிமையாளருக்கும், தனக்கும் தொடர்பில்லை என்பதை விளக்கமளித்த பிறகும், வருமான வரித்துறை தனக்கெதிராக நடவடிக்கை எடுப்பதாக கதிர் ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, வரி வசூலிக்கும் வருமான வரித்துறை நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு குறித்து வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டும், விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

மேலும் படிக்க: திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

First published:

Tags: Chennai High court, Income Tax raid