Home /News /tamil-nadu /

ஏபிவிபி முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையாவிற்கு நிபந்தனை ஜாமீன்

ஏபிவிபி முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையாவிற்கு நிபந்தனை ஜாமீன்

மருத்துவர் சுப்பையா

மருத்துவர் சுப்பையா

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் சுப்பையா சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாகன நிறுத்த தகராறில், அதே குடியிருப்பில் இருந்த பெண்மணியின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்தும், பயன்படுத்திய முககவசத்தை வீசியும் இடையூறு செய்ததாக வீடியோ வெளியானது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யபட்ட டாக்டர் சுப்பையாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் சுப்பையா சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாகன நிறுத்த தகராறில், அதே குடியிருப்பில் இருந்த பெண்மணியின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்தும், பயன்படுத்திய முககவசத்தை வீசியும் இடையூறு செய்ததாக வீடியோ வெளியானது.

இந்த விவகாரத்தில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த பெண்மணியின் உறவினர் அளித்த புகாரில், இந்திய தண்டனை சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது  சட்ட பிரிவுகள் சேர்க்கபட்டது.
இந்த வழக்கில் மார்ச் 19ம் தேதி மருத்துவர் சுப்பையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பின் ஜாமீன் கோரி மருத்துவர் சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன் மார்ச் 21ம் தேதி வரை டாக்டர் சுப்பையாவிற்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணக்கு வந்தது.

அப்போது டாக்டர் சுப்பையா தரப்பில் புகாரளித்த பெண்மணியே புகாரை திரும்ப பெறுவதாக கூறிய நிலையில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டதாகவும், சிறுநீர் கழித்ததாக கூறப்படும் காட்சி சித்தரிக்கப்பட்டது எனவும் வாதிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண்மணி தரப்பில், அந்த பெண்மணி காவல்துறையால் மிரட்டப்பட்டுள்ளதாக புகார் அளித்த உறவினர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

Also read... முன்னாள் அமைச்சரின் மகனிடம் ரூ.30 கோடிக்கும் மேல் மோசடி

இதனிடையே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்திற்கு மருத்துவர் சுப்பையா-வை தற்போது கைது செய்தது ஏன் எனவும் , விடுமுறை தினத்தன்று கைது நடவடிக்கை மேற்கொண்டது ஏன் எனவும் காவல்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே சுப்பையா மீது வழக்கு பதியப்பட்டதாகவும், மார்ச் 6ஆம் தேதிதான் சாட்சியம் பதிவுசெய்யப்பட்டதால் அதன்பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விடுமுறை நாள் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, மருத்துவர் சுப்பையாவிற்கு  நிபந்தனை ஜாமீன்  வழங்கி உத்தரவிட்டார். மேலும் விசாரணைக்கு தேவைப்படும்போதெல்லாம் விசாரணை அதிகாரி முன்பு மருத்துவர் சுப்பையா ஆஜராக வேண்டுமென தனது உத்தரவில் நிபந்தனை விதித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி