முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. மறு பிரேத பரிசோதனை நடத்தலாம் - நீதிமன்றம் அனுமதி

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. மறு பிரேத பரிசோதனை நடத்தலாம் - நீதிமன்றம் அனுமதி

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

  • Last Updated :

கள்ளக்குறிச்சி மாவட்டம்  சின்ன சேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கணியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 13ம் தேதி பள்ளியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரி அவரது தந்தை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி,  போராட்டம் நடத்த அனுமதி அளித்தது யார் என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.

,கலவரத்துக்கு யார் காரணம் என்பதை விரைந்து கண்டு பிடிக்க வேண்டும் என்றும் கருப்பு சட்டை அணிந்த கலவரக்காரர்கள் யார். காவல்துறை தங்களது பவரை காட்ட வேண்டும் என்றும் கூறிய நீதிபதி .நீதிமன்றம் இந்த விசாரணையை கண்காணிக்கும் என்று தெரிவித்தர்.

இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி கலவரம் திட்டமிட்ட வன்முறை.. பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க வேண்டும்: நீதிமன்றம்

மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். தகுதியிலாத் மருத்துவர்கள் கொண்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, தகுதியில்லாத மருத்துவர்கால் என எப்படி சொல்லலாம். நீங்கள் நிபுணரா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்தலாம் என்று தெரிவித்த நீதிபதி, மனுதாரர் பரிந்துரைக்கும் மருத்துவர்கள் கொண்டு மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட முடியாது. மருத்துவர்களை நீதிமன்றமே நியமிக்கும்.அனைத்தும் வீடியோ பதிவு செய்ய வேண்டும், மூன்று மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் படிக்க: வாட்ஸ் அப் அழைப்பு.. திடீரென திரண்ட மக்கள்.. கள்ளக்குறிச்சி கலவரத்தின் முழு பின்னணி

மறு பிரேர பரிசோதனையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கேசவன் உடன் இருக்கவும் அனுமதி அளித்த நீதிபதி, இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் பேட்டியளிக்கவும் தடை விதித்தார். மேலும், ‘ மறு பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை அடக்கம் செய்யும் போது எந்த அசம்பாவிதமும் நடைபெற கூடாது. இறுதி ஊர்வலம் அமைதியாக நடைபெறுவதை மனுதாரர் உறுதி செய்ய வேண்டும். காவல்துறை தங்களது விசாரணை அறிக்கையை  29ம் தேதி தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் உத்தரவிட்டார்.

First published:

Tags: Chennai High court, Kallakurichi