செந்தில் பாலாஜி, ஜோதிமணிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

ஜோதிமணி, செந்தில் பாலாஜி

தாங்கள் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி வழக்கு தொடர்ந்திருந்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின்போது கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு செந்தில் பாலாஜி சென்றிருந்தார்.

இரவு 12 மணிக்கு மேல் தன்னுடைய வீட்டிற்கு வந்து மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாக செந்தில் பாலாஜி, ஜோதிமணி உட்பட 3 பேர் மீது மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் மூன்று பேர் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

தாங்கள் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி, வழக்கறிஞர் செந்தில்குமார் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதில் வாரத்தில் மூன்று நாட்கள் தாந்தோன்றி மலை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மூன்று பேருக்கும் முன் ஜாமின் வழங்கப்பட்டது.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published: