தாம்பத்திய உறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்ளித்துள்ளது.
வேலூர் மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் சேகர். 55 வயதான சேகர் சமையல் தொழில் செய்துவருகிறார். தனது மனைவி ஆரவள்ளியுடன் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் அவர் வசித்து வந்துள்ளார். சமையல்காரர் சேகர் தனது மனைவி ஆரவள்ளியுடன் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி சேகர் தன்னுடைய மனைவி ஆரவள்ளியை தாம்பத்தியத்திற்கு அழைத்தப்போது, மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஆத்திரமடைந்த சேகர், ஆரவள்ளியின் கழுத்தை நெறித்து கொலை செய்தார்.
இதுகுறித்து எம்.ஜி்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி சேகருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court